சோம்பலால் தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றுகின்றன. எப்போதும் சுறுசுறுப்புடன் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவதே நல்லது. நல்ல மனம் படைத்தவர்கள் உலகில் காணும் அனைத்தையும் நன்மை தரும் கண்ணோட்டத்துடனே அணுகுவார்கள். போதும் என்ற மனநிறைவுக்கு நிகரான செல்வம் எதுவுமில்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறு இல்லை. துன்பம் என்பது தொடர்கதை அல்ல. அது பாலத்தைக் கடந்து செல்லும் நீரைப் போல, ஏரியில் நீந்தும் வாத்து ஓர் உதறு உதறியதும் உடலில் நீர் சிதறிப் போவது போல உலக வாழ்வில் இருந்தாலும் அதை உதறித் தள்ளிவிட்டால் துன்பங்கள் நம்மை விட்டு ஓடிப்போய் விடும். அசைக்க முடியாத மன உறுதி, நம்பிக்கை இந்த இரண்டும் அடிப்படைப் பண்புகள்.
- அன்னை சாரதாதேவியார்