மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

டிராபிக் போலீஸ் சாதனை!

டிராபிக் போலீஸ் சாதனை!

நம்மில் எத்தனைப் பேர் செய்யும் வேலையை நேசித்து செய்கிறோம் என தெரியாது. ஆனால், நாம் கடந்து வரும் சில மனிதர்கள் தங்கள் கடமையை சரியாகவும் நேர்மையாகவும் நேசித்து செய்வது பிரமிப்பை ஏற்படுத்தும். கடந்த புதன்கிழமையன்று பெங்களூரு கப்பன் பூங்கா போக்குவரத்து காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரியும் உமேஷ் உதுப்பா புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார். காலை 11 மணிக்கு போக்குவரத்து பணிக்கு வந்த உமேஷ் இரவு 8 மணி வரை பணியை செய்துள்ளார். அன்றைய நாள் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 165 வழக்குகள் பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 9 மணி நேரம் பணியிலிருந்த உமேஷ் அன்று ஒரே நாளில் சுமார் ரூபாய் 5,000 ஆயிரம் அபராதத் தொகையாக வசூல் செய்துள்ளார்.

ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் போடாமல் கார் ஒட்டியவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள் என அனைவர் மீதும் உமேஷ் வழக்குப்பதிவு செய்து ஒரே நாளில் அபராதத் தொகையாக ரூ.65,000 வசூல் செய்துள்ளார். இது பெங்களூரு போக்குவரத்து காவல்துறையில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

அதேபோல் ஐதராபாத் நகரத்தில் போக்குவரத்து பிரிவில் துணை ஆய்வாளர் பதவியில் இருக்கும் சையத், தினமும் வேலைக்கு செல்லும்போது ஆறு பாட்டில்களில் பெட்ரோலை கொண்டு செல்கிறார். பெட்ரோல் தீர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கும் யாரையாவது பார்த்தால் அவர்களுக்குப் பணம் வாங்காமல் பெட்ரோல் கொடுத்து உதவுகிறார். இது மக்களிடம் அவர் சேவையின் மீதான வியப்பையும் மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon