மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

பெண்கள் மார்புக்கச்சை அணியாத தினம்!

பெண்கள் மார்புக்கச்சை அணியாத தினம்!

பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ‘நோ பிரா’ (No Bra Day) தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எப்படி தோன்றியது என தகவல்கள் இல்லாவிட்டாலும் 2011ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரா அணிய இயலாது என்பதால் அவர்களது உணர்வுகளை உள்வாங்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்களுக்கான அறிகுறிகளைக் கண்டறியவும், சுயமாக பெண்கள் தங்கள் மார்பகங்களை சோதனைக்கு உள்ளாக்கிக் கொள்ளவும் இந்த தினத்தில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அக்டோபர் 13ஆம் தேதியை அதற்கான தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளன்று மார்பக புற்றுநோய் வந்த பெண்களை உற்சாகப்படுத்த பிராவை 24 நேரம் அணியாமல் வீட்டில் வைத்து விட்டு செல்லுங்கள் என்ற வாசகம் பரப்பப்படுகிறது.

அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அக்டோபர் 14 ‘பிக் பிங்க்’ தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மார்பக புற்றுநோய் நலனுக்காக நிகழ்ச்சிகளை நடத்தவும், பிங்க் நிற ஆடைகளை அணிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை பெண்களின் சிகிச்சைக்காகப் பணத்தை திரட்டவும் இந்த தினத்தைப் பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மார்பகங்களை தகுந்த இடைவேளையில் பரிசோதனை செய்யக் கோரியும் இந்த இரண்டு தினங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உலகமெங்கும் நடத்துகிறார்கள்.

ஒருபடி மேலே போய் உலகின் உயரமாக கட்டடமான புர்ஜ் கலிப்பா, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக நிதி திரட்ட இரண்டு நாட்கள் பிங்க் நிறத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது. இங்கு வரும் விருந்தினர்களும் இதில் கலந்து கொள்ள, பிங்க் நிறத்தில் உடை அணிந்து வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் தொகை அனைத்தும் துபாய் மன்னர் ஷேக் முகமது பின்னின் நிதிக்குச் செல்லும். அவரிடமிருந்து மார்பக புற்றுநோய் அறக்கட்டளைக்கு இந்த தொகை செல்லும் என அறிவித்துள்ளார்கள்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon