மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 அக் 2016

பெண் குழந்தைகள் வாழ பாதுகாப்பாற்ற நாடா இந்தியா?

பெண் குழந்தைகள் வாழ பாதுகாப்பாற்ற நாடா இந்தியா?

பெண் குழந்தைகளும் பெண்களும் வாழ பாதுகாப்பான நாடு எது என சர்வதேச தன்னார்வ நிறுவனம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு அட்டவணைப்படி (Oppurtunity index), பாகிஸ்தான், பூட்டான், நேபாள் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடு என்று அந்த அறிக்கை கூறுகிறது. ‘சேவ் த சில்ட்ரன்’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் பெண் குழந்தைகளும் பெண்களும் வாழ பாதுகாப்பான நாடுகளில் இந்தியா 90ஆவது இடத்தைப் பிடித்து, பாகிஸ்தானைவிட பின் தங்கியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில்,

பாகிஸ்தான் 88ஆவது இடத்திலும், நேபாள், 85ஆவது இடத்திலும், பூட்டான் 80ஆவது இடத்திலும் உள்ளது. குழந்தை திருமணம், இளம் வயதில் கருத்தரிப்பு, மகப்பேறு இறப்பு, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பங்கு,

கல்வியில் இடை நிற்றல் ஆகிய ஐந்து அடிப்படை விஷயங்களைக் கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்வீடன் முதலிடம் பிடித்துள்ளது. பெண்கள், பெண் குழந்தைகள் வாழ பாதுகாப்பான இடமாக ஸ்வீடன் கருதப்படுகிறது. அதைத்தொடர்ந்து பின்லாந்து இரண்டாவது இடம் மற்றும் நார்வே மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும், மோசமான நாடுகளாக மத்திய ஆப்பிரிக்க 142ஆவது இடத்திலும், சாத் 143ஆவது இடத்திலும் மற்றும் நைஜீரிய 144ஆவது இடத்தைப் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடான பங்களாதேஷ் இந்த பட்டியலில் 111ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 121ஆவது இடத்திலும் உள்ளது. மேலும், சிரியா 78ஆவது இடத்தில் உள்ளது. கானா 100ஆவது இடத்தில் உள்ளது.

இந்த அறிக்கைப்படி, நேபாள் போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடு, பெண்கள் பாதுகாப்பில் ஒப்பீட்டளவில் ஸ்பெயினுக்கு நிகராக உள்ளது. நேபாளில் 86% பெண்கள் மேல்நிலை பள்ளியை நிறைவு செய்துள்ளனர் . மேலும், பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்கா, அல்ஜீரியா மற்றும் கஜகஸ்தானை விட பின்தங்கி 32ஆவது இடத்தில் உள்ளது. கஜகஸ்தான் 30ஆவது இடத்தில் உள்ளது. வருமான வீதம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பெண்களின் பிரதிநித்துவம், அதிக இளம் வயதில் கருத்தரிப்பு மற்றும் அதிக மகப்பேறு இறப்பு போன்றவற்றில் அமெரிக்கா பின் தங்கியுள்ளது.

144 நாடுகளை தேர்ந்தெடுத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கை குழந்தை திருமணங்களின் பரிமாணம் பற்றி விளக்குகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது. மேலும், உலகளவில், 15 கோடி பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

சனி 15 அக் 2016