மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

பெங்களூருவில் வரிக்குதிரை!

பெங்களூருவில் வரிக்குதிரை!

பெங்களூரு மக்கள் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு, வரிக்குதிரையை பார்க்கப் போகின்றனர். அக்டோபர் 19ஆம் தேதி முதல் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் அனைத்து வரிக்குதிரைகளும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. மைசூர் உயிரியல் பூங்காவில் இருந்து வாங்கப்பட்ட வரிக்குதிரை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டது. அப்போதிலிருந்து வரிக்குதிரைகளை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வாங்க பன்னர்கட்டா உயிரியல் பூங்கா எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என அந்த பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறுதியாக இரண்டு ஆண் வரிக்குதிரை மற்றும் இரண்டு பெண் வரிக்குதிரை என நான்கு வரிக்குதிரைகள் இஸ்ரேல் ராமட் கன் சஃபாரி பார்கில் இருந்து வாங்கப்பட்டது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் உயிரியல் பூங்காவுக்கு வரிக்குதிரைகள் வந்து சேர்ந்தது. ஆனால் அவற்றை அதிகாரிகள் காட்சிக்கு வைக்காமல் முதலில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்பிறகு உள்ளூர் தட்பவெப்ப நிலைக்கு வரிக்குதிரைகள் பழகுவதற்காகக் காத்திருந்தனர். மேலும், குதிரைகளுக்கு ஏற்றவாறு பெரிய இடப்பரப்புத் தேவைப்பட்டது. இன்போசிஸ் அறக்கட்டளை ஆதரவுடன், ரூ .50 லட்சம் செலவில் அதற்கான வேலிக் கட்டப்பட்டுள்ளது. சஃபாரிக்கு காத்திருக்கும் பகுதியின் அருகில் வரிக்குதிரைகள் இருப்பிடம் அமைக்கப்படும். பன்னர்கட்டா உயிரியல் பூங்கா இப்போதுள்ள 24 ஏக்கரில் இருந்து 50 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, மேலும் பல உயிரினங்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காவுக்கு இஸ்ரேல் உயிரியல் பூங்காவில் இருந்து நன்கொடைகளாக வெள்ளைச் சிங்கம் மற்றும் மான்கள் அளிக்கப்பட்டுள்ளன. சைப்ரஸ் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஒட்டகச்சிவிங்கி நன்கொடையாக வழங்கப்பட்டது. வெள்ளை முடிகள் மற்றும் வெளிர் நீல பச்சை கண்களைக் கொண்ட வெள்ளை சிங்கங்கள் மிகவும் அரிய விலங்காகவும், அழிந்துவிட்ட இனங்களாகவும் கருதப்படுகிறது. கடந்த 1970ஆம் ஆண்டு, வெள்ளை சிங்கங்கள் முதன்முதலில் தென் ஆப்ரிக்கா திம்பாவதி வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்டது. இப்போது 300க்கும் குறைவான வெள்ளை சிங்கங்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon