மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

வெட்டு - ஒட்டு! ஐஸ்வர்யா ராய் படத்துக்கு ஆபரேஷன்!

வெட்டு - ஒட்டு! ஐஸ்வர்யா ராய் படத்துக்கு ஆபரேஷன்!

‘ஐஸ்வர்யா ராய் இத்தனை நெருக்கமான காட்சியில் நடித்ததே இல்லை’ என்று படம் பார்த்தவர்கள் வெளியே சொல்லச் சொல்ல நெருப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவதாகத்தான் இருக்கிறது சம்பவம். ‘ஏ தில் ஹை முஷிக்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டரை கரன் ஜோஹர் இத்தனை வலுவானதாக உருவாக்கவில்லை. ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொது வெளியில் அவருக்கு உருவாக்கப்பட்டிருக்கும் இமேஜை வைத்து சொத்தையான கேரக்டருடன் அவரிடம் போய் நின்றிருக்கிறார்.

கதையையும் கேரக்டரையும் கேட்ட ஐஸ்வர்யா ராய், ‘ஹரே கரன் சாப்… ஏன் இந்த கேரக்டர் இவ்வளவு வீக்னஸுடன் இருக்கு. நல்லா டெவலப் பண்ணுங்க. நான் கண்டிப்பா நடிக்கிறேன்’ என்று ஐஸ் சொல்லிவிட தளர்த்துவிட்ட நரம்புகளையும் இழுத்துப்பிடித்து ஒரிஜினல் கேரக்டரை ஐஸ்ஸிடம் கொடுத்தார். ஐஸ்வர்யா ராய், தனது ஸ்பெஷல் ஸ்கில்ஸை அதனுடன் சேர்த்து அல்டிமேட் கேரக்டராக அதை உருவாக்கி விட்டார். எனவே, எந்த வகையிலும் அந்தக் கேரக்டரைப் பற்றியக் காட்சிகளை நீக்கச் சொல்லும் தைரியத்துடன் ஐஸ்வர்யா ராய் இல்லை.

இயக்குநர் கரன் ஜோஹாரும் அதற்குத் தயாராக இல்லை. ஆனால், பச்சன் குடும்பம் எப்படியும் அந்தக் காட்சிகளை நீக்கிவிடுவதென சென்ஸார் போர்டு வரை கையை நீட்டி உதவி கேட்டு விட்டது. ஆனால், சென்ஸார் போர்டு கையில் கத்திரியை எடுத்தாலே கரன் ஜோஹார் தரப்பிலிருந்து செய்தி வெளியாகி பரபரப்பாகி விடுகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே அதிக எதிர்ப்புகளை சந்தித்து அவமானப்பட்டு நிற்கும் சென்ஸார் போர்டு காட்சிகளை நீக்கவும் தயாரில்லை. அப்போதுதான், உரி தாக்குதலில் பாகிஸ்தானுடன் பகை உண்டாகி பாகிஸ்தான் நடிகர்களை கெட்-அவுட் என்று சொன்னது பாலிவுட். ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஃபவத் கானை வைத்து படத்தை முடக்கிவிடலாம் என்று திட்டமிட்டபோதும் கரன் ஜோஹார் லாவகமாக எஸ்கேப் ஆனார்.

‘சொந்த ரிஸ்க்கில் படத்தை ரிலீஸ் செய்பவர்கள் ரிலீஸ் செய்து கொள்ளட்டும். எனக்கு அதைப் பற்றி பிரச்னை இல்லை. விருப்பமிருக்கும் விநியோகிஸ்தர்களுக்குப் படம் கொடுக்கப்படும். நீங்க சென்ஸார் சர்டிஃபிகேட்டை மட்டும் கொடுங்கள்’ என அழுத்திப் பேச U/A கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லா பிரச்னைகளும் முடிந்துவிட்டதென நினைத்துக் கொண்டிருந்தபோது, ரன்பீர் கபூரும், ஐஸ்வர்யாவும் ஷூட்டிங்குக்கு முன்பு ஸ்கிரீன் டெஸ்டிங்கில் எடுத்த போட்டோ ஷூட் படங்கள் இணைய தளங்களில் வெளியாகி படுபயங்கர டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த போட்டோக்களுக்கு படத்தில் இருந்த காட்சி எவ்வளவோ பரவாயில்லை. ஆனால், இந்தப் பிரச்னையில் ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை என்பதுதான் சோகம். எதிர்வீட்டுப் பெண்ணாக இருந்தால் கூட ‘பிங்க்’ படத்தில் வருவது போல அமிதாப் பச்சன் உதவியிருப்பார். அவர் வீட்டுப் பெண்ணாகப் போய்விட்டாரே ஐஸ்!

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon