மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

காதலர்களுக்காக ஃபேஸ்புக்கின் புதிய ‘கள்ள’ அப்டேட்!

காதலர்களுக்காக ஃபேஸ்புக்கின் புதிய ‘கள்ள’ அப்டேட்!

‘எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, எந்த போலீஸாக இருந்தாலும் சரி, ஏன் அது ஃபேஸ்புக்காகவே இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட மெஸேஜைப் படிக்க முடியாது’ என்ற பம்மாத்து வேலையைத்தான் ஃபேஸ்புக் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. ஆனால், கிரைம் போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் மொத்த தகவலையும் கொடுத்து விடுகிறது ஃபேஸ்புக் என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும். அப்படி இருந்தாலும் ‘சீக்ரெட் உரையாடல்’ என்ற ஆப்ஷனை இப்போது புதிதாக ஏன் ஃபேஸ்புக் சேர்த்திருக்கிறது என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்பில் சீக்ரெட் மெஸேஜ் அனுப்புவது எப்படி என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதனுடன் ஒப்பிடும்போது, அது எவ்வளவோ பரவாயில்லை. ஃபேஸ்புக் பயனாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு மெஸேஜும் End-to-End Encrypt செய்யப்பட்ட தகவல்கள், யாராலும் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியாது என்பது ஃபேஸ்புக்கின் பிரைவஸி உறுதிமொழி. அப்படியிருக்க இந்த ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் ‘Secret Conversation' என்ற அப்டேட் எதற்காக என்பது விளங்கிக் கொள்ளவே முடியாத ஒன்று.

லேட்டஸ்ட் ஃபேஸ்புக் மெஸெஞ்சரின் அப்டேட்டின் மூலம், மெஸெஞ்சரின் ‘ME' கேட்டகரியில் Secret Conversation என்ற எக்ஸ்டிரா பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் Secret Conversationஐ ஆக்டிவேட் செய்வது, டீ-ஆக்டிவேட் செய்வது என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

இந்த இடத்தில் ஆக்டிவேட் செய்தவுடன், யாருடன் Secret Conversationஇல் ஈடுபட வேண்டுமோ அவர்களது Chat Headஐ ஓப்பன் செய்து அதன் Settingsஇல் போய்ப் பார்த்தால் Secret Conversation என்ற பகுதி அங்கும் இருக்கும். அந்த Secret Conversationஐ டச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபருடன் Secret Conversationக்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.

அதிலும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது. Secret Conversationஇல் மெஸெஜைப் பெற்றவர், அதை ஓப்பன் செய்து பார்த்தவுடன் எத்தனை நொடிகளில் அந்த மெஸெஜ் மறைந்து போக வேண்டும் என்பதையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம்தான் உண்மையிலேயே ஃபேஸ்புக் மெஸெஞ்சர் பயனாளர்களின் தனி மனித சுதந்திரம் காக்கப்படுகிறது. ஆனால், இதற்கு சீக்ரெட் என்று பெயர் வைத்து ‘கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஜோடி, கிச்சனில் கொஞ்சிக் கொள்வது’ போன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறது மெஸெஞ்சர் டெவலப்பர் டீம். வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத்தனமாகக் காதல் செய்யும் இளசுகள், நீண்ட உரையாடலுக்குப் பின், இரவில் அப்படியே தூங்கிப்போய் ‘காதல் கான்வர்சேஷன்’ஐ டெலிட் செய்யாமல் வீட்டில் மாட்டிக்கொள்வது வேண்டுமானால் குறையலாம்.

- சிவா

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon