மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 22 அக் 2019

ஓவியம் பழசு, ஸ்டைல் புதுசு - இது உதட்டோவியம்!

ஓவியம் பழசு, ஸ்டைல் புதுசு - இது உதட்டோவியம்!

இன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் தன் அழகைப் பாதுகாக்க அதிக செலவு செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பெண்மணி அழகியல் சாதனமான லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டு அதன்மூலமாக ஓவியங்களைத் தீட்டி வருகிறார். டொரண்டோவைச் சேர்ந்த ஓவியர் நட்டாலி ஐரிஷ் என்பவரே இவ்வாறு ஓவியங்களைத் தீட்டிவருபவர். கேன்வாஸ் துணிமீது லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளைப் பதித்து, முழு ஓவியத்தையும் உருவாக்குகிறார்.

ஒவ்வொருமுறையும் சலிக்காமல் லிப்ஸ்டிக் போட்டு, முத்திரை பதிக்கிறார். இதுகுறித்து அவர், “எல்லோரும்தான் ஓவியம் தீட்டுகிறார்கள். வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக லிப்ஸ்டிக் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு அதிக பொறுமை தேவைப்படும். சில மணி நேரங்களில் இருந்து ஒரு வாரம் வரைகூட ஆகலாம். உதடுகள் வலி எடுக்கும். ஆனாலும் எல்லோரும் பாராட்டும்போது வலி மறைந்து போகும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon