மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

மண்ணெண்ணெய் மானியம் குறைப்பு!

மண்ணெண்ணெய் மானியம் குறைப்பு!

மண்ணெண்ணெய்க்கான மானியத்தை குறைக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வசதியற்ற ஏழை குடும்பங்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த சப்ளையை காலாண்டுக்கு 5 சதவிகிதம் என்ற அளவில் மத்திய அரசு குறைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, மானியச்சுமையைப் போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எண்ணெய் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு ஆண்டில் மண்ணெண்ணெய் பயன்பாடு முந்தைய ஆண்டுகளை விட மிகவும் குறைவாக இருக்கும். மானியத்துடன் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விளக்கு எரிக்கவும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு சமையலுக்காகவும் பயன்படுகிறது. 2015-16 நிதியாண்டில் மண்ணெண்ணெய் பயன்பாடு 4.2 சதவிகிதம் சரிந்து 6.8 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையில் மண்ணெண்ணெய் பயன்பாடு 10 சதவிகிதம் சரிந்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் சப்ளையை காலாண்டுக்கு 5 சதவிகிதம் குறைக்கிறது. அந்த வகையில் இதுவரை 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்துக்குள் மேலும் 10 சதவிகிதம் குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon