மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

லார்சன் & டூப்ரோ: ரூ.3,799 கோடிக்கு ரயில்வே ஒப்பந்தம்!

லார்சன் & டூப்ரோ: ரூ.3,799 கோடிக்கு ரயில்வே ஒப்பந்தம்!

ரூ.3,799 கோடி மதிப்பிலான ரயில்வே மேம்பாட்டு ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளதாக லார்சன் & டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தின் ரெவாரி நகரத்தையும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் தாத்ரி நகரத்தையும் இணைக்கும் 128 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில்வே பாதையை அமைக்க மத்திய ரயில்வே துறை டெண்டர் அறிவித்திருந்தது. இப்பணிகளை மேற்கொள்ள லார்சன் & டூப்ரோ நிறுவனம் ஒப்பந்தத்தை ஜப்பானின் சோஜிட்ஸ் கார்ப் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றியுள்ளது.

லார்சன் & டூப்ரோ நிறுவனம், ரெவாரி - தாத்ரி வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் ரயில்கள் செல்லும்வகையில் 2 X 25 கிலோ வோல்ட் ஏ.சி. மின்திறன் கொண்ட தண்டவாளங்களை அமைக்கவுள்ளது. 128 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இந்த தண்டவாளம் ரெவாரி - ஆல்வார் - மேவட் - குர்கான் - பல்வால் - ஃபரிதாபாத் ஜி.பி.நகர் ஆகிய பகுதிகள் வழியாக கடந்துசெல்லும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து அமைப்பதற்கு 29 மிகப்பெரிய பாலங்கள், 240 சிறிய பாலங்கள், ஒரு நீளமான சுரங்கப் பாதை, இரண்டு துணை நிலையங்கள், 5 நடுத்தர சிக்னல் சந்திப்புகள் ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஜப்பான் நாட்டின் ஜப்பான் இண்டர்நேஷனல் கார்பொரேஷன் ஏஜென்சி நிதியுதவி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon