மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

ஹெச்.பி-யில் 4,000 பேர் பணிநீக்கம்!

ஹெச்.பி-யில் 4,000 பேர் பணிநீக்கம்!

ஹெச்.பி. நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாவ்லெட் பெக்கர்ட் (ஹெச்.பி.) நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரிண்டர்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம், அதன் வர்த்தகப் பணிகளை மறுசீரமைப்பு செய்ய இலக்கு நிர்ணயித்து, அடுத்த இரண்டு ஆண்டுக்குள் அதன் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது.

வர்த்தகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதை சீரமைக்க ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ஹெச்.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வு நிறுவனமான கார்ட்னர் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை மூன்றாவது காலாண்டில் 5.7 சதவிகிதம் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த எட்டு காலாண்டுகளில் ஏற்பட்ட சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon