மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

வேலை செய்யலன்னா நாடு வல்லரசாகும்! - அப்டேட் குமாரு

வேலை செய்யலன்னா நாடு வல்லரசாகும்! - அப்டேட் குமாரு

வதந்தி பரப்புனா புழல்ல போட்ருவோம்னு ஒரு பக்கம் போலிஸ் பயம் காட்டுது. இன்னொருபக்கம் வதந்தி வந்தா நல்லதுதான்னு சிம்பு ஃபேஸ்புக்ல பதில் சொல்றாப்ல... சட்டங்களும் கெடுபிடிகளும் சாமான்யனுக்குத்தான்னு ஒவ்வொருமுறையும் நிரூபிச்சிக்கிட்டே இருக்கு. (இதென்ன அப்டேட் குமாரு ஸ்டைல்ல இல்லையேன்னு யோசிக்கிறீங்களா) பரம்பரைல முதல் பட்டதாரின்னு இருக்குற பேரை, முதல் சிறைவாசின்னு மாத்திக்க விரும்பல) வழக்கம்போல அப்டேட்டைப் படித்துவிட்டு தங்களது பொன்னான வாக்குகளை Share சின்னத்தில் க்ளிக் செய்யுமாறு கூறிக்கொண்டு...

//Abubacker Sithick

ஏதாவது ஒரு பிரச்னைய முடிவுக்கு கொண்டுவர தற்கொலை செஞ்சிக்கிறவன்தான் உலகத்துலயே ஆகச்சிறந்த முட்டாள்.

பிரச்னைய போராடி ஜெயிச்சிருந்தா சரித்திரம் பேசும். சப்பையா தற்கொலை பண்ணிட்டா பேஸ்புக்ல சாயங்காலம் வர பேசுவாய்ங்க அவ்ளோதான் ...//

//Dya Mithra

காலைலேயே வீட்ல அர்ச்சனை நடக்குது. என்னைக்கு ஒரு பொண்ண வீட்ல வேலை செய்யாதன்னு சொல்லுறங்களோ அன்னைக்கே நாடு வல்லரசு ஆகும்//

//Raja Prabhu VK

தொழிலதிபர் #அம்பானி_மனைவி சென்னை #அப்பல்லோ

மருத்துவமனையில் #முதல்வர் உடல் நலம் குறித்து #விசாரித்தார் !!

மோடி வரலைனீங்க அவங்க ஓனரம்மாவே வந்தாச்சு...

அப்பலோ வேற கட்டத்துக்கு போகுது...//

\@Piramachari

டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு முள்ளை எடுக்கணுமா?

முள் சின்னது. அதையேன் தொந்தரவு பண்ணணும்? காலை எடுத்துடுங்க.//

\\@Alien420_

எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்லயே

ஏன் இந்தியாலயே

கமலுக்கு இணையா போட்டி போடக்கூடிய

ஒரே ஆள் பாலகிருஷ்ணாதான்

பி.கு: இதை ரசிக்க ஒருவகையான ஜென் நிலை தேவை//

\\@massitvf

அப்ப இந்த அழுகை எல்லாம் பொய்யா? கோபால் சொல்லுங்க கோபால் சொல்லுங்க

சி.கா//

\\@Kannan_Twitz

சைனா பொருள்கள் வாங்கி யூஸ் பண்ணக்கூடாதுன்னு பொங்குற அரசு, பேசாம அதை தடை செய்யலாமே!

வித்தாதானே வாங்கமுடியும்!

இதச் சொன்னா_நம்மல_தேசத்துரோகினுவான்க//

\\@எவனோ ஒருவன்

கண்டதும் காதல் வழியாது

கண்டதால் கற்பும் அழியாது

பூனையில் சைவம் கிடையாது

ஆண்களில் ராமன் கிடையாது

புரட்சிகள் ஏதும் செய்யாமல்

பெண்ணுக்கு நன்மை விளையாது

கண்ணகி சிலைதான் இங்குண்டு

சீதைக்கு தனியாய் சிலையேது//

\\@Sathik_143

பாப்புலரானவன் பாத்ரூம் போனாகூட நியூஸ்ல வரும்.

பாப்புலரா இல்லாதவன் பாடையில போனாலும் நியூஸ் வரவே வராது.

சமுதாய_கீச்சீ//

-லாக் ஆஃப்

வெள்ளி, 14 அக் 2016

அடுத்ததுchevronRight icon