மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்யும் அமெரிக்க சிறுமியர்!

ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்யும் அமெரிக்க சிறுமியர்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து விரைவில் வீடு திருப்புவதற்கு அமெரிக்காவில் சிறுமியர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்னானி தலைமையிலான குழுவினரும், லண்டன் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பெல் ஆகியோர் தொடர் சிசிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வரின் உடல்நிலை பற்றி சரியான தகவல் வெளிவராதநிலையில், அதிமுக தொண்டர்களும் அமைச்சர்களும் அப்பல்லோ முன் காத்திருக்கின்றனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் முதல்வர் பூரண குணமடையவேண்டி பல பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், “தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அமெரிக்கவாழ் தமிழ்ச் சிறுமி வானதி பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து வானதி இணையதளம் மூலம் கூறியதாவது:

எனது நண்பர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மூச்சுத்திணறல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பல நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து அன்பைத் தெரிவிக்க ஆவலோடு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் வானதியுடன் அவருடைய நண்பர்களும் இணைந்து முதல்வருக்காக வழிபடுவது வீடியோ காட்சியில் காணமுடிகிறது. இதில், இறுதியாக “கெட் வெல் சூன் அம்மா, வீ லவ் யூ” எனக் கூறி தங்களது பிராத்தனையை முடிவு செய்கிறார்கள்.

தமிழக சிறுமியர் முதல் அமெரிக்க சிறுமியர் வரை தமிழக முதல்வருக்காக வழிபடுவது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

GET WELL SOON AMMA

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon