மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

புகைப்பழக்கம் உடல் எடையை குறைக்குமா!

புகைப்பழக்கம் உடல் எடையை குறைக்குமா!

நாம் ஒரு பழக்கத்துக்கு அடிமையானபிறகு, அது சரி என்று நிலைநாட்டுவதற்காக ஒரு காரணத்தைச் சொல்லி மற்றவர்களை நம்ப வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மன உளைச்சலைக் குறைக்க சிகரெட் பிடிக்கிறோம் என்று கூறுவார்கள். இன்னும் ஒரு சிலர், தங்களை மற்றவர்கள் கௌரவமாக எண்ண வேண்டும் என்பதற்காக புகை பிடிக்கிறோம் என்பார்கள். தற்போது, புதிதாக ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள். அதாவது, உடல் பருமனைக் குறைப்பதற்காக புகை பிடிக்கிறோம் என இளைய தலைமுறையினர் கூறுகின்றனர். இதுசம்பந்தமாக அமெரிக்காவில் இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆண்களில் 46 சதவிகிதமும், பெண்களில் 30 சதவிகிதத்தினரும் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புகைபிடிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலகளவில் அதிக மரணங்கள் ஏற்படுவதற்கு புகையிலை முதல் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவிலும் புகைப்பிடித்தலுக்கு ஏராளமானோர் அடிமையாகி உள்ளனர். இவர்களில் 90% பேர் ஸ்டைலுக்காக புகைபிடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் புகைபிடிப்பதைப் பார்த்து தானும் பிடிக்க வேண்டும் என்று ஆசையும் புகைபிடிக்க ஒரு காரணமாக அமைகிறது. இதிலிருந்து மன உளைச்சலால் புகைபிடிப்பவர்கள் மிகக் குறைவு என்பது தெளிவாகிறது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon