மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

டவர் பிசினஸ்: 51% பங்குகளை விற்ற ரிலையன்ஸ்!

டவர் பிசினஸ்: 51% பங்குகளை விற்ற ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், தனது கடன் சுமையைக் குறைக்கும்விதமாக டவர் பிசினஸின் 51 சதவிகிதப் பங்குகளை ரூ.11,000 கோடிக்கு கனடா நாட்டைச் சேர்ந்த புரூக்ஃபீல்டு நிறுவனத்திடம் விற்றுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.42,650 கோடி கடன் சுமை இருப்பதாகவும், அடுத்த ஒரு வருடத்தில் 75 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அதன் தலைவர் அனில் அம்பானி சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே, கடனைக் குறைக்கும் நடவடிக்கையாக தங்களது ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு விற்கப்போவதாக அறிவித்தது.

இந்நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தனது டவர் சார்ந்த பிசினஸின் 51 சதவிகிதப் பங்குகளை புரூக்ஃபீல்டு நிறுவனத்துக்கு விற்பதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும் இந்த டவர் பிசினஸில் ரிலையன்ஸ் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளைக் கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்கும் ரூ.11,000 கோடியை கடனை அடைக்கப் பயன்படுத்தப்போவதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமும் ஏர்செல் நிறுவனமும் இணையவிருப்பதால், கடன்சுமை ரூ.17,000 கோடியாகக் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், புரூக்ஃபீல்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்கும் ரூ.11,000 கோடியால் கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று ரிலையன்ஸ் தரப்பு தெரிவிக்கிறது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon