மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் வாக்குவாதம் : இருவர் கைது!

முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் வாக்குவாதம் : இருவர் கைது!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. அப்பகுதில் அதிமுக பிரமுகராக இருக்கிறார். இவர் தனது முகநூலில் முதல்வர் உடல்நிலை பற்றி ஆதங்கத்துடன் எழுத, அந்தப் பக்கத்தில் முதல்வர் உடல்நிலை பற்றி அவதூறாகப் பதிவு செய்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கனரா வங்கியில் அவர்கள் பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. முகநூல் பதிவைப் பார்த்த புனிதா இதுபற்றி அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது, இதுபற்றி கேட்ட புனிதாவுக்கும் அவர்களுக்கும் முகநூலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் உடல்நிலை பற்றி என்ன, ஏது என்று தெரியாமலேயே வாட்ஸ் அப் தகவல்களைப் படித்துவிட்டு உண்மை என நம்புகிறீர்கள், அதை முகநூலிலும் பதிவு செய்கிறீர்கள் என்று கேட்டார். ஆனால் அவர்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து, வதந்தி கிளப்புவோர்மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதை அறிந்த புனிதா தொண்டாமுத்தூர் போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் முகநூலில் முதல்வர் குறித்த வதந்தி பரப்பியதை ஒத்துக்கொண்டதை அடுத்து அவர்களைக் கைது செய்தனர். அவர்கள்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon