மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

குத்தகைக்கு விமானம்! - பதிவு தேவையில்லை

குத்தகைக்கு விமானம்! - பதிவு தேவையில்லை

வெளிநாடுகளிலிருந்து குத்தகைக்கு எடுக்கும் விமானங்களை இந்தியாவில் இயக்குவதற்கு அவற்றை இந்தியாவில் பதிவு செய்யாமல், வெளிநாட்டு உரிமத்திலேயே இயக்கும் திட்டம் அதிவிரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் தங்களது விமானங்கள் தவிர்த்து, வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் விமானங்களை குத்தகைக்கு எடுத்து அவற்றை இந்தியாவில் இயக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் அந்த விமானங்களை இயக்குவதற்கு முதலில் இந்திய உரிமம் பெறவேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். இதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. ஒருவேளை, குத்தகைக்கு எடுத்த நிறுவனத்துடன் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அந்த விமானத்தை திருப்பி வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அந்த விமானத்தின் உரிமத்தை மீண்டும் மாற்ற வேண்டியிருக்கும். இதில் காலவிரயம் ஏற்படுவதோடு, அதற்கு ஆகும் செலவும் அதிகமாக இருக்கிறது.

எனவே, இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும்வகையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் பி.எஸ்.புல்லர் மற்றும் செயலாளர் சவுபே ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் அயல்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமானங்களை இந்திய உரிமம் இல்லாமலேயே இந்தியாவில் இயக்கலாம் என்றும் அதிவிரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் விமானப் போக்குவரத்து உலகளவில் தனது சேவையை அதிகரித்துவருவதாலும் அதே நேரத்தில், இந்தியாவில் விமானப் போக்குவரத்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon