மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

கோடீஸ்வரர்கள்: நான்காவது இடத்தில் இந்தியா!

கோடீஸ்வரர்கள்: நான்காவது இடத்தில் இந்தியா!

ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக சொத்து மதிப்புடைய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

கேப்ஜெமினி நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் எண்ணிக்கை குறித்த ஆய்வை மேற்கொண்டு பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதில், 2015-16 நிதியாண்டில் இந்தியாவிலுள்ள அதிக சொத்து மதிப்புடைய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 797 பில்லியன் டாலர்கள் ஆகும்.

27 லட்சம் கோடீஸ்வரர்களுடன் ஜப்பான் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, 10 லட்சம் கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 2.3 லட்சம் கோடீஸ்வரர்களுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதில், ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு முந்தைய ஆண்டைவிட 11.4 சதவிகிதம் உயர்ந்து 6,571 பில்லியன் டாலர்களாக உள்ளது.

உலகளவில் அதிக சொத்து மதிப்புடைய கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஆசிய பசிபிக் நாடுகள் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டில் முதலிடத்தில் உள்ளது. இதன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 17.4 லட்சம் கோடி டாலர்களாகும். இது, முந்தைய ஆண்டைவிட 9.9 சதவிகிதம் கூடுதலாகும். மேலும் பிற உலக நாடுகளைவிட இது 5.8 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon