மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

சாலை மேம்பாடு: இந்தியாவை நாடும் நேபாளம்!

சாலை மேம்பாடு: இந்தியாவை நாடும் நேபாளம்!

இந்தியா - நேபாளம் இடையேயான இரு தரப்பு வர்த்தகத்தை எளிதாக்க நேபாளத்தின் சாலை மேம்பாட்டுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று, அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் நடந்த ‘வங்காள விரிகுடா பலதுறைசார்ந்த தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொழில் மாநா’ட்டில் கலந்துகொண்ட நேபாள வர்த்தக அமைச்சர் கவுச்சன் தகலி பேசுகையில், இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகரிக்கும்விதமாக நேபாள எல்லையின் நான்கு பகுதிகளில் கூடுதலாக நான்கு முனையங்கள் அமைக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சுலபமாக்க, சாலை போக்குவரத்தை மேம்படுத்த இந்தியா நேபாளத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. முன்னதாக, கடந்த 2004ஆம் ஆண்டு இந்த நாடுகளுக்கிடையே செய்யப்படும் வர்த்தகத்துக்கு ஏற்றவாறு ஒரு வர்த்தக மையம் அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் வர்த்தக மையம் செயல்படுத்தப்படாததால் அதுகுறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon