மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

ஆடை விற்பனையில் இறங்கும் டைட்டன்!

ஆடை விற்பனையில் இறங்கும் டைட்டன்!

டைட்டன் பிராண்ட் இந்தியாவின் மிகப்பெரிய கடிகாரம் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படுகிறது. மேலும் உலகளவில் கடிகாரம் தயாரிப்பில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 30 வருடங்களாக சொனாட்டா, டைட்டன், தனிஸ்க் ஆகிய பிராண்டு பெயர்களில் குவார்ட்ஸ் கடிகாரம் மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்துவரும் இந்நிறுவனம், புது முயற்சியாக பெண்கள் பாரம்பரிய ஆடைகள் விற்பனையில் இறங்குகிறது.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டைட்டன், கடந்த 1980களில் குவார்ட்ஸ் கடிகாரம் விற்பனையைத் தொடங்கிய டைட்டன், ஒரு காலகட்டத்தில் அரசுக்குச் சொந்தமான ஹெச்.எம்.டி. கடிகாரங்களையே பின்னுக்குத் தள்ளியது. டைட்டன் நிறுவனம் சுமார் 1,200 கடைகள் மூலமாக பல்வேறு பிராண்டுகளில் நகைகளை விற்பனை செய்து வருகிறது. வருடத்துக்கு 15 மில்லியன் கடிகாரங்களைத் தயாரித்துவரும் இந்நிறுவனம் பிற லைஃப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையையும் குறிவைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, பெண்களுக்கான பாரம்பரிய உடைகளை விற்பனை செய்யவிருப்பதாக கடந்த 12ஆம் தேதி பங்குச்சந்தை நேரத்தின் முடிவில் டைட்டன் தெரிவித்திருந்தது. எனவே, அடுத்த ஒரு வருடத்தில் பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை அமைக்கவுள்ளது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon