மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 19 செப் 2019

ஃபேஸ்புக்கில் அவதூறு: பள்ளி முதல்வர் கைது!

அரசியல் தலைவர்கள் தொடர்பாக கருத்துகளை எழுதுகிறவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக வதந்தி பரப்பியதாக இதுவரை 6 பேர் கைது செய்யப்படுள்ளநிலையில், இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் மோடி குறித்தும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதியதாக தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரட் நகரில் உள்ள சராதனா பகுதியில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளவர் முதாசிர் ராணா. இவர் தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகவும் விரோத ஊக்குவிப்புச் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டு, குற்றவியல் 153 ஏ பிரிவின்கீழ் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரது முகநூல் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் இதே சட்டப்பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon