மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

இணையதளம் மூலம் பெண் குழந்தை விற்பனை!

இணையதளம் மூலம் பெண் குழந்தை விற்பனை!

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் ஒருமாத கைக்குழந்தையை மூன்று லட்சம் ரூபாய்க்கு (5000 யூரொ) இ-பேவில் விற்பனை செய்ய, விளம்பரம் செய்த தம்பதியினரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எதையும் விற்கலாம்; வாங்கிக்கொள்ளலாம். ஆனால், குழந்தையைக்கூட ஆன்லைனில் விற்க முடியுமா என்று அந்த விளம்பரத்தைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலவிதமான பொருட்களை விற்கும் இணையதளம் ‘இ-பே’. இதில்தான் அந்த விளம்பரம் வெளியானது.

குழந்தையை விற்பனை செய்ய புகைப்படத்தையும், மூன்று லட்சம் தொகையையும் குறிப்பிட்டிருந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் அந்த இணையதளத்துக்கும், காவல்துறையினருக்கும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இ-பே உடனடியாக அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது. மேலும், பெர்லின் நகர காவல்துறையினர் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது: “இந்த விளம்பரம் குழந்தையின் பெற்றோர்களின் கணினி மூலம் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை தம்பதிகளின் குடும்பத்தினரும் பயன்படுத்துவதால் விளம்பரத்தை வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் விசாரணையில் குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்” என்று கூறியுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட வறுமை நிறைந்த நாடுகளில்தான் குழந்தைகளை விற்பார்கள். ஜெர்மனி போன்ர பொருளாதார வளம் பெற்ற ஒரு நாட்டில் இவ்வாறான விளம்பரம் வெளியாவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon