மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

ஸ்ரேயா பிராவோ ஜோடி!

ஸ்ரேயா பிராவோ  ஜோடி!

நடிகை ஸ்ரேயாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் திரையுலகில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு அவர்கள் ஜோடியாக வந்து அருகருகே உட்கார்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் சிரித்து பேசிவிட்டு, பின்னர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அப்பொழுது அவர்களை சிலர் படம் பிடிக்கவே, ஸ்ரேயா சங்கடப்பட்டுக் கொண்டு வேகமாக காருக்குச் சென்றிருக்கிறார்.

பிராவோ, தனக்கு இந்திய கலாச்சார பண்பாடுகள் மிகவும் பிடித்து இருக்கிறது என்று பேட்டிகளிலும் அடிக்கடி சொல்லி வந்தார். சமீபத்தில் தான் ‘தும்பின்2’ என்ற ஹிந்தி படத்துக்காக நடிகை நேகா ஷர்மாவுடன் நடனம் ஆடியிருக்கிறார். பிராவோ இந்திய சினிமாக்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் இருவரையும் உணவு விடுதிக்கு வந்ததை சில ஊடகவாசிகள், ஸ்ரேயாவுக்கும் பிராவோவுக்கும் காதல் மலர்ந்தது, கல்யாணம் விரைவில் என்று எழுதியுள்ளார்கள். நடிகைகள் பிரபலமான நபர்களுடன் உணவு அருந்தச் செல்வது இயல்பாக நடக்கும் விஷயம்தான். அப்படியே ஸ்ரேயாவும், பிராவோவும் காதலித்தால் அதை அவர்கள் வாயால் கூறும்வரை காத்திருப்போம். மேட்ரிமோனியல் டாட்காம் வேலை நமக்கெதற்கு?

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon