மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மீது புகார்!

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மீது புகார்!

‘ரிங்கோ’ நிறுவனம் இந்தியாவின் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன், ஏர்செல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு போதிய இன்டர்கனெக்‌ஷன் பாயிண்ட் வழங்குவதில்லை என்று புகார் அளித்துள்ளது.

ரிங்கோ நிறுவனம் மொபைல் ஆப் மூலமாக சர்வதேச அளவில் மிகக் குறைந்த கட்டணத்தில் அழைப்பு சேவை வழங்கி வருகிறது. இந்த ரிங்கோ ஆப்பை பதிவிறக்கும் செய்து அதன் மூலமாகவே 50 முதல் 60 சதவிகித குறைந்த கட்டணத்தில் காலிங் செய்யும் வசதி இந்த ஆப்பில் உள்ளது.

ரிங்கோ நிறுவனம் தற்போது மும்பையில் மட்டும் இச்சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரிங்கோவுக்கு போதியளவிலான இணைப்பு வழங்குவதில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிங்கோ நிறுவனத்தின் சி.இ.ஓ. பவின் துராகியா கூறுகையில், “மும்பையில் சேவை வழங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளோம். மேலும், இந்தியாவின் பிற நகரங்களிலும் சேவை வழங்க விண்ணப்பித்துள்ளோம்.

பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் தவிர்த்து வேறு எந்த நெட்வொர்க்கும் எங்களுக்கு இன்டர்கனெக்‌ஷன் பாயிண்ட் வழங்குவதில்லை. எங்களது இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தால், அதில் உங்களுடைய காண்டாக்ட்கள் அனைத்தும் இணைக்கப்படும். அழைப்புகளை இணைப்பதற்கான இன்டர்கனெக்‌ஷன் பாயிண்டுகளை ஏர்டெல், ஏர்செல், ஐடியா, வோடஃபோன் உள்ளிட்ட நெட்வொர்க்குகள் வழங்குவதில்லை.

இதற்கான தொகையை நாங்கள் விதிமுறைப்படி செலுத்துவோம் என்று தெரிவித்திருந்தும் அவர்கள் இணைப்பு வழங்க மறுக்கின்றனர். நாங்கள் இந்தியாவில் உரிமம் பெறுவதற்கு ரூ.7.5 கோடி செலுத்தியுள்ளோம். மேலும், இந்தியா முழுவதிலும் சேவை வழங்குவதற்காக இன்னும் ரூ.7.5 கோடி செலவிடவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon