மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 22 செப் 2019

டி.சி.எஸ். லாபம் 8.4% உயர்வு!

டி.சி.எஸ். லாபம் 8.4% உயர்வு!

டாடா கன்சல்டன்ஸி சர்வைசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டுக்கான நிகர லாபம் 8.4 சதவிகிதம் உயர்வடைந்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான லாபம் குறித்த அறிக்கையை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தக் காலாண்டில் 8.4 சதவிகித உயர்வுடன் ரூ.6,586 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது. மேலும், மொத்த வருவாய் ரூ.29,284 கோடியாக உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,293 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவன சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநரான சந்திரசேகரன் கூறுகையில், “இந்தக் காலாண்டு எங்களுக்கு வழக்கமான காலாண்டாக அமையவில்லை. போதிய அளவிலான வருவாய் கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழல் வாடிக்கையாளர்களிடையேயான நம்பகத் தன்மையைக் குறைத்துவிடும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய ஐ.டி. துறை கடந்த எட்டு வருடங்களிலேயே இந்த இரண்டாவது காலாண்டில் மோசமான சரிவைச் சந்திக்கும் என்று ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதேபோல, நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனங்கள் மட்டும் 0.5 முதல் 3 சதவிகிதம் அளவிலான வளர்ச்சியை அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon