மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக வறுமையா?

பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக வறுமையா?

இந்திய அரசு, கடந்த 15 வருடங்களாக ஊட்டசத்துள்ள உணவுகளை மக்களுக்கு அளிக்க முயற்சி செய்து வந்தது. ஊட்டச்சத்து விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும்கூட நாட்டில் 15% மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்பதுதான் உண்மை.

ஆசியாவின் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், பசியால் வாடும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 97ஆவது இடம் பெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பட்டினிப் பட்டியலை, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக ஆசியாவிலுள்ள 118 நாடுகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதில் இந்தியா 97ஆவது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவை விட பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் நாடுகளான பங்களாதேஷ், ஈரான், ஈராக், நைஜீரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களின் உணவு பழக்கம், உணவு கிடைத்தல், மக்கள் தொகை போன்றவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவை விட மற்ற நாட்டு மக்கள் முன்னிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இந்தியாவை விட அதிக மக்கள் பட்டினியில் வாடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட குந்தைகளின் எடை குறைவு, குழந்தைகளின் வளர்ச்சி குறை உள்ளிட்ட நான்கு முக்கிய காரணிகளை வைத்து இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடுகள் பிடித்துள்ள இடங்கள்:

சீனா - 29

வியட்நாம் - 64

கம்போடியா - 71

நேபாள் - 72

இந்தோனேஷியா - 73

மியான்மர் - 75

இலங்கை - 84

பங்களாதேஷ் - 90

இந்தியா - 97

வட கொரியா - 98

பாகிஸ்தான் - 107

தைமூர் - 110

ஆப்கானிஸ்தான் - 111

இதில் இந்தியா மிகவும் 97ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் நைஜீரியா, எத்தியோப்பியா, சியாரா லீயோன் உள்ளிட்ட நாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்தியாவைவிட அதிகமானோர் பட்டினியில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியா கடந்த 2000ஆம் ஆண்டு 83ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது 97ஆவது இடம் பிடித்துள்ளது. இதேபோல வங்கதேசம் இப்பட்டியலில் 2000ஆம் ஆண்டு 84ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவை விட ஏழு இடங்கள் முன்னேறி 90ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon