மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

முதல்வருக்காக இலவச இளநீர் வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

முதல்வருக்காக இலவச இளநீர் வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

முதல்வருக்காக அப்பல்லோ முன் காத்திருக்கும் அதிமுக தொண்டர்களுக்கு இலவச இளநீர் வழங்கி வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் சுகுமார். தமிழக முதலமைச்சர் ஜெயலித்த உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டு, எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வருடைய உடல்நிலை குறித்து சரியான தகவல் வெளிவராத நிலையில் அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும் மருத்துவமனை முன் குவிந்த வண்ணம் உள்ளனர். முதல்வர் பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் பல இடங்களில் வேண்டுதல்களும், வழிப்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்களுக்கு, இலவச இளநீர் விநியோகத்தை அதிமுக தொண்டர் ஒருவர் செய்து வருகிறார்.

அப்பல்லோ மருத்துவமனையின் பின்புறத்தில் உள்ள அசோக் நகரில் சுகுமார் வசித்து வருகிறார். இலவச இளநீர் விநியோகம் மட்டுமின்றி ஒரு நாளைக்கு ரூ.500-க்கு பெட்ரோல் போட்டு, அந்த பெட்ரோல் தீரும் வரை தனது ஆட்டோவில் இலவச சவாரியை செய்து வருகிறார். இதன்மூலம் தான் மகிழ்ச்சியடைவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon