மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

மருத்துவக் கல்லூரி இயக்கத் தடை – உயர்நீதிமன்றம்!

மருத்துவக் கல்லூரி இயக்கத் தடை – உயர்நீதிமன்றம்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தரத்தை பராமரிக்க வேண்டிய அவசியத்தை அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஐதராபாத் உயர்நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்கும் விசாகப்பட்டினம் சங்கிவல்சா மருத்துவ அறிவியல் என்.ஆர்.ஐ. நிறுவனத்தின் மருத்துவக் கல்லூரி அனுமதியைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது.

ஏற்கனவே, தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மருத்துவக் கவுன்சில் மற்றும் மையத்தின் அனுமதியைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழு, கல்லூரியில் ஆய்வை மேற்கொண்டது. அப்போது மற்றொரு மருத்துவக் கல்லூரியில் இருக்கும் ஆறு ஆசிரியர்களின் பெயர்களை இங்குள்ள ஆசிரியர்கள் என நிர்வாகம் காட்டியுள்ளது. எனவே, இந்தக் கல்லூரியை 2015- 2016 மற்றும் 2016 – 2017 கல்வியாண்டுகளில் இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

மேலும், கல்லூரி நிர்வாகம் இந்த கல்வி ஆண்டில் கல்லூரியை இயக்க அனுமதி கோரினர். இந்நிலையில், தற்காலிக தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி யூ.துர்கா பிரசாத்ராவ், இந்த இடைக்கால கட்டத்தில் அத்தகைய நிவாரணத்தை வழங்க முடியாது என மறுத்துவிட்டனர். இதனால் இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். சேர்க்கையை அந்த கல்லூரியால் நடத்த முடியாது. உடனடியாக கல்லூரியில் ஆய்வு நடத்தி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை முடிக்க அனுமதி தரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் அதிகாரிகள் இயக்கும் நீதிமன்றத்தை வலியுறுத்தியது.

ஆனால், அந்த கல்லூரிக்கு, அதன் தரப்பை விளக்க பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதை பயன்படுத்திக் கொள்ள கல்லூரி தவறிவிட்டது.

அங்கு வேலை செய்வதாக தெரிவித்த ஆசிரியர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஆய்வுக்குழு முயன்றபோது, அனைத்து அழைப்புகளும் போட்டி மருத்துவக் கல்லூரியான நீருக்கொண்ட மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணத்தாலேயே இக்கல்லூரியை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்திலும் சில கல்லூரிகள் மீது இவ்வாறான புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon