மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 22 செப் 2019

ஏர்டெல்: 50 நிமிட இலவச அழைப்பு!

ஏர்டெல்: 50 நிமிட இலவச அழைப்பு!

ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு 50 நிமிட இலவச அழைப்பு மற்றும் 2 ஜி.பி. கிளவுட் சேமிப்பு சேவை ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில் புதிதாக update செய்யப்பட்ட ‘மைஏர்டெல் ஆப்’ (My AirtelApp)செயலியை பதிவிறக்கம் செய்தால் மட்டுமே இந்தச் சலுகையை பெறலாம். மேலும் ஏற்கனவே ஏர்டெல் செயலியை பயன்படுத்திவருபவர்கள் தங்களது செயலியை update செய்வதன்மூலம் இந்தச் சலுகையை பெறமுடியும்.

இதைப்பற்றி ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர்டெல் செயலியில் ஏர்டெல் கிளவுட் மற்றும் ஏர்டெல் டைலர் எனப் புதிதாக இரண்டு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏர்டெல் கிளவுட் மூலம் இணையத்தில் 2 ஜி.பி. வரையில் நமது ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதேபோல, ஏர்டெல் டைலரில் ஏர்டெல் - ஏர்டெல் 50 நிமிடம் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon