மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

ஹெலிகாப்டர் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

ஹெலிகாப்டர் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

கடந்த 1950ஆம் ஆண்டிலிருந்தே ரஷ்யாவிலிருந்து ராணுவத்துக்குத் தேவையான போர்க் கருவிகளை இந்தியா வாங்கி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் ராணுவ உபகரணங்களில் 70 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவையாகும்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களை இந்திய விமானப் படையில் பயன்படுத்தும்நோக்கில் அவற்றை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு, ரஷ்யாவுடன் இணைந்து விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்வது குறித்து கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்குப் பதிலளித்த ரஷ்யாவின் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மண்டுரோவ் கூறுகையில், “விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதில் எங்களது அனுபவங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதோடு, இந்தத் திட்டத்தில் இணைந்து ஆரம்பகட்ட வேலைகளிலிருந்து விமானங்களை உருவாக்கி அவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது வரையில் எங்களால் இணைந்து செயல்பட இயலும். மேலும் முதற்கட்டமாக Ka-226T ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கவுள்ளோம். அதைத்தொடர்ந்து, இம்மாத முடிவுக்குள் 200 ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை நிறைவேற்றவுள்ளோம். இந்த ஹெலிகாப்டர்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்தல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்க முடிவுசெய்துள்ளோம்.

இந்த Ka-226T ஹெலிகாப்டர், மிதமான எடையுடன் பல்வேறு பயன்பாட்டு அம்சங்களைக் கொண்டிருக்கும். டேக்ஆஃப் ஆனபிறகு அதன் எடை 4 டன்களாகவும், மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகவும் இருக்கும். இதில் 1,100 கிலோ எடையை சுமந்து செல்லலாம். ’ரஷியன் ஹெலிகாப்டர்ஸ்’ நிறுவனம் இந்த டெண்டரில் இரண்டு Mi-172 ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon