மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

இந்தியாவில் இந்தியர்களுக்கே அனுமதியில்லாத இடங்கள்!

இந்தியாவில் இந்தியர்களுக்கே அனுமதியில்லாத இடங்கள்!

இந்தியாவில் இந்தியர்களுக்கே அனுமதியில்லாத 5 இடங்கள் இருக்கின்றன. இந்தியா, ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும்கூட சில இடங்களில் தன் மக்களுக்கே இடமளிப்பதில்லை என்பதுதான் உண்மை. குறிப்பிட்ட இந்த இடங்களுக்கு நாம் சென்றாலும் அனுமதி மறுக்கப்படும்.

இமாச்சலபிரதேசம், காசோலில் இஸ்ரேலி காபி ஷாப் உள்ளது. இதை ஃப்ரீ காசோல் என்றும் அழைக்கின்றனர். இந்த காபி ஷாப்பில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் இந்த காபி ஷாப் இஸ்ரேலிய பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு, இந்தியரான சிங்கி சின்கா என்பவருக்கு உணவு வழங்க இந்த காபி ஷாப்பின் உரிமையாளர் மறுத்துவிட்டார். இந்தச் செய்தியை சிங்கிசின்கா ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அதன்பின்தான் அனைவரின் கவனமும் இந்த காபி ஷாப் மீது திரும்பியது.

நகரில் உள்ள ஜப்பானிய மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய நிப்பான் உள்கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து 2012ஆம் ஆண்டு யூனோ-இன் ஹோட்டல் பெங்களூருவில் அமைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட சில பிரச்னைகளால், ஹோட்டல் ஊழியர்கள் இந்தியர்களை ஹோட்டலில் அனுமதிக்க மறுத்தனர். இப்போது, இந்த ஹோட்டல் இனப் பாகுபாடு பற்றிய குற்றச்சாட்டுகளால் பெங்களூரு மாநகராட்சி குழுவினரால் மூடப்பட்டது.

சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில், வெளிநாட்டினர் அவர்களது பாஸ்போர்ட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த ஹோட்டலின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு பலகையில் இந்தியர்களை மிகவும் இழிவுபடுத்தும்வகையில் நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை என எழுதப்பட்டிருக்கும். இது, இன பாகுபாட்டை தெளிவாகக் காட்டுகிறது.

கோவா கடற்கரையில் ரிலாக்ஸ் செய்வதற்காக அனைவரும் செல்வார்கள். ஆனால் கடற்கரையின் சில இடங்களில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டினர் மட்டுமே இந்த கடற்கரைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும். இதுகுறித்து கேட்கப்பட்டபோது, வெளிநாட்டினரின் பாதுகாப்புக்காக இந்தியர்களை அனுமதிப்பதில்லை என உரிமையாளர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.

டூர் ப்ளான் என்றால், இளைஞர்கள் கவனத்துக்கு வரும் முதல் இடம் பாண்டிச்சேரிதான். அழகான பிரஞ்சு மற்றும் இந்திய கட்டடக்கலை சூழப்பட்ட அழகிய கடற்கரை இங்கு உள்ளது. இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான இடமாகவும் உள்ளது. ஆனால் கோவாவைப் போல் இங்கும் கடற்கரையின் சில பகுதிகளில் இந்தியர்களுக்கு அனுமதியில்லை. அந்த இடங்கள் ’ஃபாரினர்ஸ் பீச்’ என்றே அழைக்கப்படுகிறது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon