மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பிரசவம் பார்த்த இராணுவ வீரர்கள்!

பிரசவம் பார்த்த இராணுவ வீரர்கள்!

இத்தாலியில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அந்நாட்டு ராணுவ வீரர்கள் இருவர் சேர்ந்து பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தாலியின் தலைநகரான ரோமில் அமைந்துள்ள ரோம் சதுக்கத்தில், செவ்வாய்க்கிழமை இரவில் இரு ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பெண்ணின் அழுகை சத்தம் கேட்டது. அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அந்தப் பெண் பிரசவ வலியால் துடிப்பதைப் பார்த்து ராணுவ வீரர்கள் அவருக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தனர். அந்தப் பிரசவத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதையடுத்து, அந்தப் பெண் தனது குழந்தையுடன் இத்தாலியில் ஃபெட்மின் ஃப்ரடிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஃப்ரான்சிஸ்கோ மங்க் கூறியது: நான் எப்படி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தேன் என்று தெரியவில்லை. எனக்கு குழந்தைகள்கூட கிடையாது என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon