மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பெண்ணின் தலைமுடியை அறுத்த ஊர் பஞ்சாயத்து!

பெண்ணின் தலைமுடியை அறுத்த ஊர் பஞ்சாயத்து!

இந்தியாவில் கிராமங்கள் தோறும் செயல்படும் ஊர்த்தலைவர் பஞ்சாயத்து, தன் வரம்புக்கும் சட்டத்துக்கும் மீறிய தண்டனைகளை அளித்து வருகிறது. சில இடங்களில் ஊர் பஞ்சாயத்து குறித்து புகார் எழுந்த காரணத்தால், பஞ்சாயத்து முறையே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் சில இடங்களில் இவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு செயல்பட்ட நிலப்பிரபுத்துவ மனநிலையிலேயே செயல்படுகின்றனர்.

மேற்குவங்கத்தில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு பெண் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். இந்நிலையில் அவர், தனக்குப் பிடித்த ஆடவருடன் ஊரைவிட்டுப் போய்விட்டார். ஆனால் அப்பெண்ணின் கணவர் அவர்களை தேடிக் கண்டுபிடித்து ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் ஒப்படைத்தார். ஊர் பஞ்சாயத்து, அவருக்கு 6,000 ரூபாயை அபராதத் தொகை விதித்தது. ஆனால் அந்தப் பெண்ணால் அதைக் கட்ட முடியவில்லை என்பதால், அப்பெண்ணின் கணவரிடம் சொல்லி அவளது முடியை வெட்டச் சொல்லியிருக்கிறது ஊர் பஞ்சாயத்து. அதன்படி, அவளது கணவரும் ஊர் மக்களில் சிலரும் வீட்டுக்குள் நுழைந்து முடியை அறுத்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் நொவ்டா காவல் நிலையத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு எதிராக புகார் அளித்தார். அதில், மூன்று பேரை ஊர் பஞ்சாயத்தை உருவாக்கிய காரணத்துக்காக போலீஸார் கைது செய்துள்ளனர். வடமாநிலங்களில் ‘காப்’ பஞ்சாயத்து முறை இன்னும் வழக்கொழியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon