மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

நடந்தா சுகர் குறையாதா? - அப்டேட் குமாரு

நடந்தா சுகர் குறையாதா? - அப்டேட் குமாருவெற்றிநடை போடும் தமிழகம்

கருத்து சொல்வதற்காக ஆண் கீபோர்டில் கைவைக்கப் பயப்படும் ஒரே மேட்டர் இந்த #நோபிராடே -வாகத்தான் இருக்கும். எந்தப்பக்கம் பேசினாலும் கோல் அடிக்கிறார்கள். அப்படியே கீபோர்டிலிருந்து கைகளை எடுத்துவிட்டு ஸ்க்ரோல் டவுன் செய்து அப்டேட்டைப் படித்துக்கொண்டே போய்விடுவோம்.

\\@நெகிழன்

ஆம். இன்னும் சில வினாடிகள்தான் இந்த நிம்மதி, நிசப்தம், கதகதப்பு எல்லாம்.

இதோ நெருங்கிவிட்டது தொப்புள்கொடியை வெட்டிப் பழகிய கைகள்.//

\\@@Geethu_Tweetz

ஒரு உயிரின் மதிப்பு உயிருடன் இருக்கும்போது தெரியாது. இறந்தபின்தான் தெரியும்....

உயிருடன் கோழி ரூ.100

உரித்த கோழி ரூ.140

வறுத்த கோழி ரூ.180//

//Abubacker Sithick

முன்னாடி ஹீரோ பேனாவப் பாத்து "ஆ"ன்னு வாயப் பொளந்துட்டிருந்தோம்

இப்ப ஐபோன் 7ஐ பாத்து "ஆ"ன்னு வாயப் பொளந்துட்டிருக்கோம்

கடைசி_வர_பாத்துட்டு_மட்டும்தா_இருப்போம்_போல_ச்சை //

\\@pshiva475

பயணத்தின்போது சக பயணி பேச ஆரம்பிச்சாவே,

என் மாமா IAS,

என் மச்சான் IPS,

என் சித்தப்பா MLAவா இருக்காருன்னுதான் ஓபனிங் என்ட்ரியே கொடுக்கிறாங்க மை லார்டு//

\\@Haritwits

அடிக்கிற வெயிலுக்கு மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் தவிர்த்தல் செயல்படுத்தலைன்னா அடுத்த வருடம் வீட்டுக்குள்ளகூட இருக்க முடியாது//

\\@vivektvnm

நீ கடவுளானாலும்

கல்லறையானாலும்

மலர்ந்த முகத்துடனே

வருவேன்

மலர்//

\\@PARITHITAMIL

காஞ்சிபுரம் அருகே ஒயிட் பெட்ரோல் லாரி சாலையில் கவிழ்ந்து வயல்வெளி நிரம்பியது

மக்கா, ஆர்வக் கோளாறில் கேன் எடுத்துட்டு பிடிக்கப் போயிடாதிங்க//

\\@karthik07248268

மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா? அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல அதனால போடுறதில்லை. #சிந்திக்கவும் //

\\@senthilcp

நாய் வாலை நிமிர்த்த முடியாது.

யோவ்! லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்னுதானே சொல்லி இருக்காங்க? எதுக்கு வாலை நிமிர்த்திட்டு இருக்கே?//

\\@Geethu_Tweetz

யாராவது ரசிப்பாங்கன்னு எந்தக் குயிலும் கூவுறதில்ல!

அதோட பசியோ, ஏக்கமோ, அழுகையோகூட இருக்கலாம்..!//

\\@iam_kanaL

ஜிவிக்கு ரசிகனாக இருப்பதும், மனநிலை சரியில்லாமல் இருப்பதும் ஒன்றே //

//Subramaniam Chupoo

ஏன் சார் பையனை போட்டு அடிக்கிறீங்க..?

சக்கரை வாங்கிட்டு வீட்டுக்கு வந்து பாத்தா 100கிராம் குறைவா இருக்கே ஏன்டா?ன்னு கேட்டா, நடந்தா சுகர் குறையும்னு சொல்றான் ..//

\\@Kozhiyaar

எல்லா தழும்புகளும் கவலையைத் தருவதில்லை!!

சில மகிழ்ச்சியையும் தரும்!!//

\\@latha_Bharathy

தன்னைவிட வயது குறைந்த பெண்ணின் வார்த்தைகளுக்கு அடங்கியதுபோல பாவனை செய்யும் ஆண்... #அழகியல்//

\\@ArchanaArchuu

ஆணுக்கு திருமணமான உடனே பெண் வீட்டின் மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. ஆனால் பெண் மருமகளாய் அதை கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்க முடிகிறது//

\\@AzamMohammed90

என்னையா..... புதுசு... புதுசா...

திட்டுறானுங்கே.....

நீயெல்லாம் எங்க உருப்படப் போற...

வைகோ-வாதான் போகப் போற ...

அடேய்...//

\\@naatupurathan

மனைவியை வைத்து சூதாடியவர்களை நாயகர்களாகக் கொண்டாடும் நாட்டில், பெண்களுக்கான மரியாதையை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும்!

கமல்!//

-லாக் ஆஃப்

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon