மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 அக் 2016

கடத்தப்பட்ட குழந்தை வீடியோ வெளியீடு!

கடத்தப்பட்ட குழந்தை வீடியோ வெளியீடு!

திருச்சி அரசு மருத்துவமனையில், ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை கடத்தியவர்களின் சிசிடிவி வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

திருச்சி அரியமங்கலம், காமராஜர் நகரைச் சேர்ந்த சக்ரவர்த்தி-சரண்யா தம்பதியின் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை சாதனா. சரண்யா இரண்டாவது பிரசவத்துக்காக கடந்த ஆறாம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது 35 வயதுள்ள பெண்ணும் 45 வயதுள்ள ஆணும் சரண்யாவிடம், ‘நாங்கள் குழந்தையை பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி குழந்தை சாதனாவை கடத்திச் சென்றனர். பின்னர், குழந்தையைக் காணவில்லையென்றதும் அதிர்ச்சியடைந்து திருச்சி அரசு மருத்துவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் குழந்தையைக் கடத்திய காட்சி பதிவாகியிருந்தது. அதை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் குழந்தையை கடத்தியவர்கள்பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் தெரிந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

வியாழன் 13 அக் 2016