மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும்!: திமுக கோரிக்கை!

சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும்!: திமுக கோரிக்கை!

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாகப் பேச, தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற அனைத்து விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அறிவாலயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் , காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவர் ஆவடி பவன்குமார், பலராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் துரைமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திருச்சி அய்யாக்கண்ணு, காவிரி டெல்டா பாசன சங்கம் சார்பில் பாலு தீட்சிதர், ஐக்கிய ஐனதா தள விவசாயப் பிரிவு தலைவர் ஹேமநாதன் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதித்து சில முடிவுகளை எடுத்தது. காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்று வாரியமும் அமைக்க வேண்டும், தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான விவசாய சங்கங்களை அழைத்து இன்று அண்ணா அறிவாலயத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். இந்தக் கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது. தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அந்த தீர்மானங்கள் முடிவெடுக்கப் பட்டன. மேலும் பிரதமர், ஜனாதிபதியை தமிழக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் சென்று தமிழக அரசு சந்தித்து காவிரி பிரச்னைக்கு உரிய தீர்வு காணும்படியும் இக்கூட்டம் அழைப்புவிடுத்துள்ளது அரசுக்கு.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon