மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

கரைசேர்க்குமா விஜயகாந்தின் சுற்றுப் பயணம்!

கரைசேர்க்குமா விஜயகாந்தின் சுற்றுப் பயணம்!

கரைந்துவரும் கட்சியைக் காப்பாற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்லத் திட்டமிட்டுள்ளாராம்.

தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த விஜயகாந்த், 2005ஆம் ஆண்டு தேமுதிக-வை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் நின்றவருக்கு வெற்றி. அந்தத் தேர்தலில் அவருக்கு மட்டுமே வெற்றி கிடைத்தாலும் அவரது கட்சிக்கு சுமார் 10%க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. இதனால் அவரது கட்சியின் வாக்குவங்கியில் பெரும் உயர்வு.

ஆனால் அடுத்தடுத்து மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தல்களில் தனித்து நின்று களம் கண்டவருக்கு தோல்வியே மிஞ்சியது. ’மக்களுடன் மட்டுமே கூட்டணி’ என்று சொல்லிவந்தவர் சற்றே தனது சுருதியை மாற்றினார். அதன் பலனாக, 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து 29 இடங்களில் வென்றார். பின்னர், அக்கட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆறே மாதத்தில் கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி என யூகங்கள் வெளியானநிலையில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டார். அனைத்து இடங்களிலும் அவருக்குத் தோல்வி. தோற்றவர்கள் செலவுசெய்த பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ததால் சலித்துப்போய் அமைதியானார். அப்போதே தேமுதிக-விலிருந்து எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெளியேறி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் ஐக்கியமானார்கள்.

இந்த தொடர் தோல்விகளால் கட்சி கலகலத்துப் போனது. சுமார் 18 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் இல்லாமல் இருந்தநிலையில். சமீபத்தில்தான் அம்மாவட்டங்களுக்கு புதிதாக செயலாளர்களை விஜயகாந்த் நியமித்தார். இந்நிலையில், வரும் உள்ளட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்திருக்கிறார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon