மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த சற்குணம் மரணம்!

ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த சற்குணம் மரணம்!

தமிழக முதல்வர் கடந்த மூன்று வாரங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அதிமுக பிரமுகர்கள் தமிழகம் முழுக்க பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சிரிப்பது கூட இல்லை. எங்கே சிரித்தால் அதை போட்டோ எடுத்து காலி பண்ணி விடுவார்களோ என்று அச்சத்திலேயே முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள். ஆனால் அதிமுகவில் எந்த பொறுப்போ, பதவியோ இல்லாத கடைசி மட்டத் தொண்டர்கள் உண்மையில்யே தங்களின் தலைவியின் நிலை கண்டு கலங்கிப் போயிருக்கிறார்கள். அப்படி துயரம் அடைந்த சிலர் தற்கொலைக்கு முயல்கிறார்கள். விருத்தாசலத்தில் கணேசன் என்பவர் முதல்வருக்கு உடல்நிலை சரியாகவில்லை என்ற வேதனையில் தீ குளித்தார், அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், போயஸ் கார்டனில் இருக்கும் பூங்குன்றன் அமைச்சரை தொடர்புகொண்டு , தனியார் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுங்கள் என்று சொல்ல, உடனே அமைச்சர் சம்பத், கடலூர் கண்ணன் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பூங்குன்றனிடம் போன் போட்டு தலைமை மருத்துவர் சவுந்திரராஜனிடம் பேசச் சொல்ல மருத்துவர் கண்ணணின் உயிரை காப்பாற்றி விடுவோம் என்கிறார். பேசிய மருத்துவரிடம் இதற்கான கட்டணத்தை அமைச்சர் கொடுத்து விடுவார் என்று சொல்ல அமைச்சர் முன்னாள் நகர சேர்மனிடம் கண்காட்ட பணம் கொடுக்கப்பட்டது. இதில் சுவராஸ்யம் என்ன என்றால் இந்த கண்ணன் இறந்து விட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது கடலூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் கண்ணன். ஆனால் கட்சியினரிடம் வசூலித்துதான் கொடுத்தார்கள். பன்ருட்டி எம்.எல்.ஏ மொய் வைப்பது போல வைத்தார்கள். தோல்வியடைந்த எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரன் 15,000 ரூபாயைக் கொடுத்தார்.ஆனால் அமைச்சர் சம்பத் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பைசா கொடுக்கவில்லை. இந்நிலையில்,

நேற்று (புதன் கிழமை) தீக்குளித்த அதிமுக தொண்டர் சற்குணம் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வின் தீவிரத் தொண்டரான சற்குணம் (31), சென்னை அருகே தாம்பரத்தில் வசித்து வருகிறார். முதல்வர் ஜெயலலிதா , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் குணமடையாததால் வேதனையுற்ற சற்குணம், நேற்று தாம்பரம் சானிடோரியம் சிக்னல் அருகே தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். உடனே அருகிலிருந்தவர்களும் போக்குவரத்து காவல் துறையினரும் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அதன்பின்னர், கீழ்ப்பக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon