மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ரத்தினம், நகை ஏற்றுமதி உயர்வு!

ரத்தினம், நகை ஏற்றுமதி உயர்வு!

இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜெம் (ரத்தினம்) மற்றும் நகை ஏற்றுமதி 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ரத்தினம் மற்றும் நகைகள் மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 13 பில்லியன் டாலர் மதிப்பிலான ரத்தினங்கள் மற்றும் நகைகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் இந்தாண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 14.43 பில்லியன் டலர் மதிப்பிலான ரத்தினம் மற்றும் நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி 14 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த நிதியாண்டின் நகை ஏற்றுமதி அதிகரிப்புக்கு பட்டை தீட்டிய வைர ஏற்றுமதியே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதாவது, கடந்த 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 8.64 பில்லியன் டாலர் மதிப்பிலான வைரம் மட்டுமே ஏற்றுமதியானது. ஆனால் இந்த ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 9.19 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

வெள்ளி நகைகள் ஏற்றுமதி 52.6 சதவிகிதம் அதிகரித்து 1.67 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இருப்பினும், தங்க நகைகள் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, 30 சதவிகித சரிவுடன் தங்க நகைகள் ஏற்றுமதி 1.14 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon