மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சோலார் திட்டங்களுக்கான நிதி அதிகரிப்பு!

சோலார் திட்டங்களுக்கான நிதி அதிகரிப்பு!

சோலார் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மூன்றாவது காலாண்டில் 3 பில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா உலகளவில் சோலார் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முந்தைய ஜூலை - ஆகஸ்ட் காலாண்டில் ஒட்டுமொத்தமாக 32 ஒப்பந்தங்கள்மூலம் 1.7 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது. ஆனால் இந்த செப்டம்பர் நிதியாண்டில் இதுவரையில் 45 சோலார் திட்டங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்காக, 3 பில்லியன் டாலர் (ரூ.2,00,84,23,50,000) நிதி திரட்டப்பட்டுள்ளது.

சோலார் திட்டங்களைச் செயல்படுத்தும் இந்திய நிறுவனங்களில் அதிகபட்சமாக மஹிந்திரா சஸ்டன் நிறுவனம் தெலங்கானா மாநிலத்தின் தந்தூர் 30 மெகாவாட் சோலார் திட்டத்துக்காக 31.6 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. அதேபோல, ஃபோகல் எனர்ஜி சோலார் நிறுவனம் மத்தியப்பிரதேசத்தில் 20 மெகாவாட் சோலார் திட்டத்தை செயல்படுத்த 18.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. இந்தத் தொகை அனைத்தும் யெஸ் பேங்க், ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் மற்றும் டாடா கிளீன்டெக் கேபிடல் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon