மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ரப்பர் உற்பத்தி பாதிப்பு! விவசாயிகள் கவலை!

ரப்பர் உற்பத்தி பாதிப்பு! விவசாயிகள் கவலை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பருக்கு போதிய விலை இல்லாதது மற்றும் மழையின்மையால் ஏற்பட்ட உற்பத்திக் குறைவு காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு மழையின்மையால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி கடுமையாகக் குறைந்துவிட்டது. இதனால் ஏராளமான ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழப்பு காரணமாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து ரப்பர் விவசாயி ஒருவர் கூறுகையில், “தற்போது மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்கள் போன்று கடும் வெயில் நிலவுகிறது. ரப்பர் மரங்களில் பால் உற்பத்திக்கு அவ்வப்போது மிதமான மழை தேவை. தற்போது நிலவும் வறட்சி காரணமாக ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி 50 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது. பெரிய ரப்பர் தோட்டங்களில் 350 மரங்களைக் கொண்ட ஒரு காட்டில் குறைந்தபட்சம் 35 கிலோ பச்சை ரப்பர் பால் கிடைக்கும். ஆனால் தற்போது இது 17 கிலோவாக குறைந்துள்ளது. அதேவேளையில், இந்த விகிதம் சிறு ரப்பர் தோட்டங்களில் மேலும் குறைவாக உள்ளது.

மலைப்பகுதிகளில் பால் உற்பத்தி முற்றிலும் இல்லாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ரப்பர் தோட்டங்களில் பால் வடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் ரப்பருக்கு போதிய விலை இல்லாதநிலையும், மறுபுறம் உற்பத்திக் குறைவும் ரப்பர் விவசாயிகள்மீது இரட்டைத் தாக்குதலாக உள்ளது. உடனடியாக மழை பெய்தால் மட்டுமே இதில் மாற்றம் ஏற்படும்” என்றார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon