மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பருத்தி நூல் ஏற்றுமதி சரிவு!

பருத்தி நூல் ஏற்றுமதி சரிவு!

பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளதால், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். பருத்தி உற்பத்தியில், இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் இருந்து சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு, பருத்தி நூல் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. தற்போது, சர்வதேச அளவில் பருத்தி நூலுக்கான தேவை சரிவடைந்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலத்தில் பருத்தி நூல் ஏற்றுமதி 11.58 சதவிகிதம் குறைந்துள்ளது. இதே காலத்தில், சீனாவுக்கான பருத்தி நூல் ஏற்றுமதி 14.96 கோடி கிலோவில் இருந்து 9.90 கோடி கிலோவாக குறைந்துள்ளது. அதேசமயம், வங்கதேசத்தின் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் 38.87 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், ‘பருத்தி நூலுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் தேவை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் மாதந்தோறும் 50 கோடி கிலோவாக இருந்த பருத்தி நூல் உற்பத்தி, தற்போது 47 கோடி கிலோவாக குறைந்துள்ளது’ என்றனர்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon