மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

பணிகளைத் தொடங்கினார் பன்னீர்!

பணிகளைத் தொடங்கினார் பன்னீர்!

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கவனித்து வந்த அரசு துறைகள், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்தவர் கோப்புகளைப் பார்வையிட்டார். முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 21 நாட்களுக்கும் மேலாக அவருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா நிர்வகித்து வந்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, உள்துறை, பொது நிர்வாகம், வனம் உள்ளிட்ட முக்கிய அரசு இலாகாக்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று விடுமுறை நாளிலும் கோட்டைக்கு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசு அதிகாரிகளுடன் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தியவர், வழக்கம் போல் பணிகளைத் தொடங்கினார்.

பொதுவாக விடுமுறை நாட்களில் தலைமைச் செயலகம், அரசு அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படும். ஆனால், நேற்று விடுமுறையாக இருந்தாலும் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சில துறைகளின் செயலாளர்கள் கோட்டைக்கு வந்து பணிகளைக் கவனித்ததால் கோட்டை பரபரப்பாக இருந்தது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon