மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஐந்து நாள் சிகிச்சை இன்று வருகிறார் ரிச்சர்ட் பேல்!

ஐந்து நாள் சிகிச்சை இன்று வருகிறார் ரிச்சர்ட் பேல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு

இன்றோடு 22 நாட்கள் ஆகிவிட்டன. உயிர்காக்கும் சிகிச்சை நிபுணரான ரிச்சர்ட் பேலின் வருகையை அடுத்து ஜெயலலிதாவின் உடல்நிலையை சீராக வைக்கும் முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், சிகிச்சைகளுக்கு முதல்வர் நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றும் அப்பல்லோ அறிக்கை கூறிய நிலையில், கடந்த 5ஆம் தேதி மூன்று எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளிக்க சென்னை வந்தனர். சில நாட்கள் சிகிச்சையளித்த ரிச்சர்ட் பேல், லண்டனுக்குத் திரும்பிச் சென்ற நிலையில் இன்று இரவு மீண்டும் சென்னை வருகிறார். அது போல எய்ம்ஸ் மருத்துவர்களான கில் நானி (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் அஞ்சன் டிரிக்கா (மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர்), டாக்டர் நிதீஷ் நாயக் (இதய சிகிச்சை நிபுணர்) ஆகியோரும் இன்று சென்னை வர இருக்கின்றனர். இவர்கள் 3 முதல் 5 நாட்கள் வரை சென்னையில் தங்கியிருந்து ஜெயலலிதாவின் உடல்நிலையைச் சீராக வைக்கும் சிகிச்சையைத் தொடருவார்கள் என்று தெரிகிறது. இன்னும் சில நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் முதல் அறிக்கையும், நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்ற சமீபத்திய அறிக்கைகளும் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon