மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

நெட் தேர்வு: அக்டோபர் 17 முதல் விண்ணப்பிக்கலாம்!

நெட் தேர்வு: அக்டோபர் 17 முதல் விண்ணப்பிக்கலாம்!

பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. விதிகளின்படி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர்வதற்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவராகச் சேர்வதற்கும், அதன் உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வான நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக, மத்திய கல்வி வாரியம் ஆண்டுக்கு இரு முறை நெட் தகுதி தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, 2017 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நெட் தேர்வு, நாடு முழுவதும் 90 நகரங்களில் நடைபெறவுள்ளது.

நெட் தேர்வுக்கு, ஆன்லைன் முறையில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை www.cbsenet.nic.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணங்களை நவம்பர் 17ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, டிசம்பர் 21ஆம் தேதி சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேர 2017ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி, 28 வயதை கடந்திருக்கக்கூடாது. உதவி பேராசிரியர் பணி தேர்வில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.

வழக்கமாக 80க்கும் அதிகமான பாடப்பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும் இந்த முறை 100 பாடப்பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை புதிதாக யோக பாடத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon