மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

டிரம்ப் நேர்மையற்றவர் – ஒபாமா

டிரம்ப் நேர்மையற்றவர் – ஒபாமா

‘ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர் டொனால்டு டிரம்ப்’ என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு கரோலினா மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, “அமெரிக்க அதிபராவதற்குரிய குறைந்தபட்ச குணம், அறிவு, நேர்மைகூட இல்லாதவர் டொனால்டு டிரம்ப். நான் அதிபர் வேட்பாளராக போட்டியிடும்போது சந்தித்த இரண்டு அதிபர் வேட்பாளர்களான ஜான் மெக்கைன், மிட் ரோம்னியை விட டொனால்டு டிரம்ப் மிகவும் வித்தியாசமாக உள்ளார். 2005ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிரம்ப் பேசிய பேச்சு அவர் அமெரிக்க அதிபராவதற்கு தகுதி அற்றவர் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அரசாங்கம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஹிலாரி மிகச் சிறந்தவர். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது வெள்ளை மாளிகை கண்காணிப்பு அறையில் ஹிலாரியும் இருந்தார். அப்போது அமெரிக்கப் படைகளுடன் ஹிலாரி நடத்திய உரையாடலை நான் நன்கு கவனித்தேன். அமெரிக்க அதிபராவதற்கு எல்லா தகுதிகளையும், ஒழுக்கங்களையும் உடையவர் ஹிலாரி கிளிண்டன்” என்றார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon