மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

நதிநீர் பங்கீட்டுக்காக புதிய மசோதா!

நதிநீர் பங்கீட்டுக்காக புதிய மசோதா!

நதிநீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக இந்திய மாநிலங்களுக்கு இடையில் கடும் சர்ச்சைகள் நீடிக்கிறது. இதனால் நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய நீர் கட்டமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால், எப்போது தாக்கலாகும் என்ற கேள்விக்கு ஒரு செக்கும் வைத்துள்ளது மத்திய அரசு.

நதிநீரை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் தேசிய நீர் கட்டமைப்பு வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. நதிகளை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கருதாமல் அவற்றை பொது சொத்து என்று கருத இந்த மசோதா வகை செய்கிறது. மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளின் மீது சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு சம உரிமை உள்ளது. நதிகளின் மீது எந்தவொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட முடியாது. நீர் வரத்து, இருப்பு மற்றும் பங்கீடு தொடர்பான தகவல்களை ஒளிவுமறைவு இன்றி பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்தந்த மாநிலங்களுக்கு உரிய தண்ணீரின் பங்கை முறைப்படி பகிர்ந்து கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது. மேல் பகுதியில் உள்ள மாநிலம் நதிகள் தொடர்பாக ஏதாவது திட்டங்களை நிறைவேற்ற விரும்பினால், அதுகுறித்து கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து ஆலோசிக்க வேண்டும். இதன்மூலம் அனைத்து தரப்பினருக்கும் தண்ணீர் கிடைப்பதை இந்த மசோதா உறுதி செய்கிறது. நல்ல மசோதாதான். ஆனால், அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னரே மசோதா தாக்கலாகும் என்பதுதான் இடிக்கிறது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon