மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிரியாவில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் – 15 பேர் பலி!

சிரியாவில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் – 15 பேர் பலி!

சிரியாவின் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் கடந்த ஆண்டு சிரியாவின் உள்நாட்டு போரில் ரஷ்யா தலையிடத் தொடங்கிய பிறகு, ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் சுமார் நான்காயிரம் பொதுமக்கள் உள்பட ஒன்பதாயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளதாகச் சிரியாவின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று அலெப்போ நகரத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதல் காரணமாகக் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்து வரும் வான் தாக்குதல்களில் இந்த சந்தை தாக்குதல் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சிரிய அரசாங்கம் மற்றும் ரஷியாவின் போர் விமானத் தாக்குதல்களில் ஒரு சிறிய இடைவெளி இருந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை, அது மீண்டும் தொடங்கியதில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். இதுவரை இந்த உள்நாட்டுப் போரில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தலையீடு சிரியாவில் மனிதகுலப் பேரழிவை ஆழமாக்கியுள்ளது என்று ஐ.நா. அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon