மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

கோவையில் கோர விபத்து – மூவர் பலி!

கோவையில் கோர விபத்து – மூவர் பலி!

கோவை மாவட்டம் துடியலூர் அருகே கார், இருசக்கர வாகனம் மற்றும் தனியார் பேருந்து ஆகிய மூன்றும் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை கோவை, துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் கோவை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பினை தாண்டி எதிர் சாலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் பேருந்தின் முன்புறம் சிக்கி நொறுங்கியது. இந்நிலையில் காரில் பயணம் செய்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (22), முகமது சாகிப் (23) மற்றும் சிவானந்தா காலனியை சேர்ந்த அஸ்கர் அலி (22) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம் அடைந்தார். இவரை மீட்டு சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மூவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது எனவும், ஆகையால் சாலையில் வேகக் கட்டுப்பாட்டுக் தடைகளை எற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறினர்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon