மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஈரானிலிருந்து ஆயில் இறக்குமதி உயர்வு!

ஈரானிலிருந்து ஆயில் இறக்குமதி உயர்வு!

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஈரானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆயில் அளவு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்று தாம்சன் ரியூட்டர்ஸ் ஆயில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து ஆயில் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா ஈரானிலிருந்து நாள் ஒன்றுக்கு 5,52,200 பேரல் என்றளவில் இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தியா டெஹ்ரானிலிருந்து ஆயில் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் செப்டம்பரில் முடிவடைந்ததால், தற்போது ஈரானிலிருந்து இந்தியா அதிகளவில் ஆயில் இறக்குமதி செய்து வருகிறது.

ஜனவரி - செப்டம்பர் காலகட்டத்தில் டெஹ்ரானிலிருந்து நாள் ஒன்றுக்கு 4,11,900 பேரல்கள் என்றளவில் இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஈரானிலிருந்து இந்தியா இந்த நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4,68,000 பேரல்கள் சராசரியாக இறக்குமதி செய்துள்ளது.

உலகளவில் ஆயில் இறக்குமதியில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதத்தைவிட 4.4 சதவிகித உயர்வுடன் ஒட்டுமொத்தமாக நாள் ஒன்றுக்கு 4.47 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் செப்டம்பரில் மட்டும் 1,50,200 பேரல்கள் இறக்குமதி செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து எஸ்ஸார் ஆயில் 1,34,000 பேரல்களும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1,31,000 பேரல்களும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 69,000 பேரல்களும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 68,000 பேரல்களும் இறக்குமதி செய்துள்ளன.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon